
லவ் யூ டி
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வா.மு. கோமு
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650481
Add to Cartதிருமணப்பத்திரிக்கை கொண்டு வரும் தூரத்து உறவினர் பத்திரிக்கையை கொடுத்து
விட்டு, ‘என்னை அடையாளம் தெரியுதுங்களா?’ என்று வேறு கேட்கிறார்.
யோசிக்கையில், திருப்பூர் மின்மயானத்தில் ‘ஜென்மம் நிறைந்தது… சென்றவர்
வாழ்க!” வென இவரை எரித்து விட்டு வந்த ஞாபகம் தாள் வருகிறது.
‘திருமணத்துக்கு ரெண்டு நாள் முந்தியே வந்துடோணுமுங்க!’ என்று
சொல்கிறார்கள். ரெண்டு நாள் முந்திப்போய் நான் என்ன செய்வேன்? அனைவருக்கும்
கட்டிங் சேவிங் செய்து விடலாம் அல்லது அழுக்குத்துணிகளை மூட்டையாய்
கட்டிக்கொண்டு போய் பைப்படியில் வைத்து துவைத்துக்கொண்டு போய் வெய்யிலில்
காயவைக்கலாம்!
