ஆச்சரியம் காத்திருக்கிறது
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வா.மு. கோமு
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388133142
குறிச்சொற்கள் :2019 Chennai Book Fair
Add to Cartஇந்தத் தொகுதியில் இருக்கும் இருபது கதைகளில் பனிரெண்டு கதைகள் ஆனந்த
விகடன் இதழிலும், ஏனைய எட்டுக் கதைகள் கல்கி, காமதேனு, தி இந்து, ஜன்னல்,
அந்திமழை இதழ்களிலும் வெளிவந்த வா.மு.கோமுவின் காதல் கதைகள். வெகு ஜன
இதழ்களுக்கென்று தனித்த ஒரு மொழிநடையைக் கையாளும் வா.மு.கோமு தன் எழுத்தில்
காதலினூடே ஊடாடும் வேதனைகளை ஒரு மெல்லிய நகைச்சுவையுணர்வோடு சொல்லித்
தாண்டிச் செல் வது நம்மையெல்லாம் புன்னைகைக்க வைக்கிறது. காதலுக்கு
கண்ணில்லை என்று தான் சொல்வார்கள். இவரது கதை மாந்தர்களுக்கு கண்களோடு
சேர்த்து. காது, மூக்கு, வாய் என்று எதுவுமே இருப்பதில்லை என்பது தான்
அவர்களுக்கான அடையாளம். பார்த்தவுடன் காதல், பார்க்கப் பார்க்கக் காதல்
என்கிற வகைகளில் இந்தத் தொகுதி முழுக்கவும் திகட்டத் திகட்ட காதல் மட்டுமே
பாடு பொருளாயிருக்கிறது.