book

வெள்ளையடித்த வாசனை

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ சித்திரைச்செல்வன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :162
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

திருவாரூர் மாவட்டம் அண்டக்குடி எனும் கிராமத்தை சேர்ந்தவர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்று பத்திரிகைமற்றும் ஊடகத்துறையில் பணியாற்றியவர். விகடனில் சிறந்த மாணவ பத்திரிகையாளர் விருது பெற்றவர். தற்போது சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். ஒளிப்பதிவாளர் S.R.கதிர் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி அவர்களிடம் உதவி இயக்குனராகவும், இயக்குனர் பாண்டிராஜ் அவர்களிடம் இணைஇயக்குனராகவும் பணியாற்றியவர். நரிக்குறவர்கள் பற்றி ‘ஜிப்ஸி’ எனும் தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். பால்ய நண்பர்களுடன் கோவப்பழம் பறித்து, குயில் தட்டு செய்து மேலக்கட்டுத்திடலில் வெகுநேரம் காத்திருந்து குயில் பிடித்து கொஞ்சி விளையாடி மகிழ்ந்து.. பின் வான்நோக்கி உயரப் பறக்க விடுவோம். மார்கழி மாத அதிகாலைப் பொழுதுகளில், வாசல் கோலத்திற்காகபறங்கிப் பூ, பூசணிப்பூ, வெண் தும்பைப் பூ பறிக்கச் சென்றது. வெண்பனி மூட்டத்துடன் கவிதையாய் என்னுள் வாசம் செய்கிறது. ஊரில் மழை பொய்த்த காலத்தில் ஊர்மக்கள் ஒன்றுகூடி பறையடித்து கொடும்பாவி இழுத்தவுடன் மழை பெய்து வியப்பில் ஆழ்த்திய வாழ்வனுபவத்திலிருந்தே எம்மக்களின் கதைகளை எழுதத் தொடங்கினேன்.