book

தற்கொலை குறுங்கதைகள்

₹237.5₹250 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அராத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184939033
Add to Cart

தற்கொலை குறுங்கதைகள்’இல் சட்டென்று அனைவருக்கும் பிரதானமாக தென்படுவது பாலியல். நிற்க. தருமனுக்கு அனைவருக்கும் நல்லவர்களாய் தெரிந்ததுபோல, துரியோதனனுக்கு அனைவரும் கெட்டவர்களாய் தெரிந்ததுபோல, நமக்கு ஏன் இந்த புத்தகத்தில் அனைத்தையும் தாண்டி பாலியல் தெரிந்து தொலைக்கிறது?!! இப்பொழுது தொடருங்கள். இந்த பாலியல் மட்டுமே பலரின் அறச்சீற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம். ஊருக்கு தெரியாமல் அத்தனையும் செய்தாலும் உலகுக்கு உத்தமராக உலவ வேண்டியவராக இந்த சமுதாயத்தால் பழக்கப்பட்டுள்ளோம். Facebook’இன் chat மற்றும் Whatsapp திறந்து பார்த்தாலே போதும், நம் யோக்கிதை கிழிந்துவிடும். இந்த லட்சணத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பாலியலை பதுங்கி பதுங்கி படிக்கப் போகிறோம். ஆனானப்பட்ட நடிகைகளுக்கே கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்யாசம் தெரியும் போது நமக்கு தெரியாதா? அதனால், தைரியமாக படிக்க ஆரம்பியுங்கள். இதில் உள்ள பாலியல் உங்களை ஒன்றும் (இதற்கு மேலும்) கெடுத்து விடாது. தமிழில் சில வார்த்தைகளைப் படிக்கும்போது நீங்கள் சற்று அசௌகரியமாக உணரலாம். அது தமிழில் என்பதால் தான். மற்றபடி நீங்கள் ஆங்கிலத்தில் ஃபக், ஷிட் போன்றவைகளை எந்தவித லஜ்ஜையும் இல்லாமல் பொதுவில் உபயோகிப்பதை ஒரு முறை மனதில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். திரைப்படங்களிலும் சென்ஸார் தாண்டி இவை வந்துவிடுகிறது. கங்காஜல் எனும் இந்திப் படத்தில் மாதர்சோத் அளவில்லாமல் பிரயோகப்படுத்தப் பட்டிருக்கும். மற்றுமொரு இந்திப்படத்தில் ஃபோஸ்டிகே. இந்த கற்பித நாகரித்தில் இருந்து நாம் வெளிவருவது நல்லது.clique aqui