
தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்
₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. ஸ்டாலின் குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :284
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973847
Out of StockAdd to Alert List
சுதந்திரதினப் பொன்விழாவில் காலத்தேவையை நிறைவு செய்யும் வண்ணம்,
'தேசவிடுதலையும் தியாகச் சுடர்களும் என்னும் அரிய தொகுப்பு: நால்
வெளிவந்துள்ளது. இதன் தொகுப்பாசிரியர் தோழர் க.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்,
இளைய பாரதத்தின் தகுதி மிகுதி படைத்த பிரதிநிதியாவார். நேரத்தையும்,
பொருட்செலவையும் பொருட்படுத்தாது. ஊர் வராகச் சென்று கட்டுரையாளர்களைச்
சந்தித்து, கட்டுரைகளின் நல்லாய்வின் திறமும், நம்பகத் தன்மையும் மேலிட
வேண்டுகோள் சமர்பித்துக் கட்டுரைகளைத் திரட்டினார். ஒருமுறை அன்று
பன்முறையும் தொடர்புகொள்ள வேண்டியிருந்தாலும், சற்றும் பின்வாங்காமல்,
சோர்வு பாராமல் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் பாடுபட்டது. இந்நூலுக்குக்
கிடைத்த முதற் சிறப்பாகும். இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜியின்
தலைமையின் கீழ் பணியாற்றிய கேப்டன் லட்சுமியை வட பாரதத்தில் சந்திக்கச்
சென்றார்.
