book

விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி?

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலை
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :பொது
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

படிப்பிற்கு அடிப்படை வாசித்தல். பள்ளியில் சேர்ந்த பிறகுதான் அனைவரும் வாசிக்க கற்றுக்கொள்வதில்லை. அவரவர் வீட்டின் சூழலை பொறுத்து, ஒரு மாணவர் மிக இளம் வயதிலேயே வாசிக்க கற்றுக்கொள்கிறார். ஒரு குழந்தையின் தனிப்பட்ட திறனைப் பொறுத்து, அது வாசிக்க ஆரம்பிக்கும் வயது மாறுபடுகிறது. ஆனால், பள்ளியில் சேர்ந்தவுடன் ஒருவர் முதலில் எழுத்துக்களை கற்றுக்கொள்கிறார். பின்னர், படிப்படியாக வாசிக்கப் பழகுகிறார்.வாசிப்பு என்பது வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சம். தெளிவாகவும், சிறப்பாகவும் பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு, தெளிவாகவும், சிறப்பாகவும் வாசிப்பதும் முக்கியம். ஏனெனில், வாசிப்பு என்பது மாணவர் பருவத்தில் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதற்கும் தேவையான ஒன்றாகும். குறிப்பாக ஆசிரிய தொழிலுக்கு செல்வோருக்கு வாசிப்பு திறன் அத்தியாவசியம்.