book

கொஞ்சம் உங்களோடு உங்கள் மேல் அன்பாக உரிமையாக அக்கறையாக ஒரு புத்தகம்!

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லோகநாயகி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2011
Add to Cart

சிலு சிலு வென்று குளிர் அடிக்கும் டெல்லியில் சென்று இறங்கி ; புதியவரை மதியமாய் சந்திக்கக் சென்றேன் ! அதற்கு முன்பாக எனக்கு நானே நிறைய விதிகளை போட்டுக் கொண்டிருந்தேன் ! "எக்கச்சக்கமாய் நாயகர்கள் / நாயகியர் ஏற்கனவே காத்துக் கிடக்கின்றனர் ; ஆளுக்கு ஒரு ஸ்லாட் ; அரை ஸ்லாட் என்று தீர்த்தம் வழங்கியது போலத் தான் இடங்களை சுருக்கமாய் ஒதுக்கிட முடிகிறது ! So புதுசாய் அவர்களது படைப்புகளைப் பார்த்தவுடனே பொங்கிடாதே சாமி ; நிதானம் !! go easy !! control !! என்று ஒப்பித்துக் கொண்டே அவர் முன்னே போய் நின்றேன் !! பிரெஞ்சு நாட்டவருக்கே உரித்தான புன்னகையோடு பேசத் தொடங்கியவரோடு நொடியில் நட்பாகிட முடிந்தது ! கடந்த 10 ஆண்டுகளாய் இந்தத் துறையில் உள்ளதாய்ச் சொன்னவரிடம் - நமது வண்டி 32 ஆண்டுகளாய் அவர்களது கரைகளில் மீன்பிடித்து வருவதைச் சொன்ன போது திகைத்தே போனார் ! ஊர் கதை ; உலகக் கதை என்று ஏதேதோ பேசி விட்டு, ஒரு மாதிரியாய் அவர் தனது IPAD ஐத் திறந்து தங்களது சமீபத் படைப்புகளைக் காட்டத் தயாராகிய போது நான் சேரை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு - "சொன்னதுலாம் நினைவு இருக்கட்டும் தம்பி !!" என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டேன் !! அவர் சர் சர்ரென்று பக்கங்களைப் புரட்டிக் கொண்டே ஒவ்வொரு கதையைப் பற்றியும் விளக்கிக் கொண்டே போக என் மண்டைக்குள் "கொய்ங்க்க் " என்று ஒரு ராட்சஸக் குடைச்சல் சத்தம் கேட்கத் தொடங்கியது ! "ஐயையோ..இது ரசகுல்லா மாதிரித் தோணுதே  ; ஆத்தாடி இந்தப் பால் அல்வா அள்ளுதே !! கிளிஞ்சது போ --- இந்த ரவா லட்டு கலக்கல் !!" என்று கடைவாய்ப் பக்கமாய் என் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு ஜலப் பிரவாகம் துவங்கியிருந்தது !! காலில் பூட்ஸ் இருந்தாலும் பரவாயில்லை ; கட்டைவிரலோ - மொத்தக் காலோ - சிக்கியதை இப்போதே தொண்டைக்குள் திணித்துக் கொள்வோமே என்ற நமைச்சல் படுத்தி எடுக்கத் தொடங்கியது