book

என் கல்வி என் உரிமை

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. எட்வின்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :31
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123425160
Add to Cart

வ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை. அறிவு என்பது ஒரு குழுவுக்கோ ஒரு சமூகத்திற்கோ சொந்தமானது அல்ல.அது அனைவருக்குமானது.ஆனால் அதை அடைய இன்று வரை பல குழந்தைகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் மூன்றாம் கட்ட நாடுகளாக இருக்கும் ஒரு நாட்டில் அது இன்னமும் எட்டாக் கனவாகவே உள்ளது.

கல்வி என்பது என்ன?

இந்த உலகம் எப்படி இயங்குறது என்று சொல்லித் தருவது, நம் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று சொல்வது, இந்த சமூகத்தை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வது என்று சொல்லித் தருவது. இன்றைய கல்வி அப்படித் தான் இருக்கிறதா ? என்று கேள்வி எழுப்பினால் ‘இல்லை’ என்கிற பதிலை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த கல்வி கூட எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பது தான் பெருங்கொடுமை.