அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது
₹1000
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :840
பதிப்பு :1
ISBN :9788194541479
Add to Cartஇரண்டுவிதமான வெளிப்பாடுகள்கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில்
அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, தன்னிலையின் இருத்தல் சார்ந்த
நெருக்கடிகளைப்பேசும் கவிதைகள். ‘ நான் ஏன் இவ்வளவு தனியாக இருக்கிறேன்?’ என்ற
மிகப்பழைய கேள்வியிலிருந்து பிறக்கும் கவிதைகள். இன்னொன்று ‘நீ ஏன் இப்படி
செய்தாய்?’ என இடையறாது முறையிடும் கவிதைகள். இரண்டுமே ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்தான். இட்டு நிரப்பமுடியாத இந்த எல்லையற்ற பெருந்தனிமையை
இன்னொருவரைக் கொண்டு கணப்பொழுதேனும் நிரப்பிவிடலாம் என்ற நம்பிக்கை.
நம்பிக்கை கூட அல்ல, ஒரு பிரமை. இந்தப் பிரார்த்தனைகள் யாரை நோக்கியவை
என்றுகூட நிச்சயிக்க முடியவில்லை. அவர்கள் இருப்பவர்களா, ஒருபோதும் இந்தப்
பிரபஞ்சத்தில் இருந்திராதவர்களா ?