சங்ககாலத்து வெயில்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2021
Add to Cartகையோடு வித்துக்களை
எடுத்துக் கொண்டு நடக்கிறேன்
நிழல் வேண்டுமென்றால்
ஒரு விதையை
ஊன்றி வைக்கிறேன்
***
எப்போதும்
சலசலத்துக் கொண்டிருப்பதுதான்
போதி மரத்தின் தியானம்
***
தாலாட்டுப் பாடல்
கேட்க வீடு நுழைந்த காற்று
தாய்மடியில் உறங்கும்
குழந்தை பார்த்து
வெறும் தொட்டிலை
சிறிதே ஆட்டி விட்டுக்
கடக்கிறது.
***
நின்று பார்ப்பவனுக்குத்தான்
சித்திரம் வரைந்து காட்டுகிறது
இயற்கை