book

கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு

Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பழனித்துரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :49
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410685
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

தமிழகத்தில் உள்ள எல்லாக் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்து வைத்திருக்கவேண்டும். திட்டமிடுதல் பணி செய்வதன் மூலமாகக் கிராமப் பணிகளில் மக்களை இணைத்துவிடலாம். சமுதாய முன்னேற்றம் என்பது தங்கள் கையிலுள்ளது என்ற உணர்வை மக்கள் மத்தியிலும் தலைவர்கள் மத்தியிலும் உருவாக்கலாம். தான் ஒரு பயனாளி அல்லது மனுதாரர் என்ற பார்வையை மாற்றி, தான் முன்னேற்றத்திற்கு உழைத்திடும் ஒரு பங்காளன் என்ற உணர்வை ஊட்டலாம்.

 வளர்ச்சித் திட்டங்கள் தயார் செய்யும்போது உற்பத்தியை பெருக்கி, பொருளதார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமையக்கூடியதாக இருக்கவேண்டும். பொருளாதார வளர்ச்சி மூலம் எற்படக்கூடிய பயன்கள் சமுதாயத்தின் பல்வேறுபட்ட மக்களைச் சென்றடையவேண்டும். வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலம் வருமானத்தைப் பெருக்கிடும் வகையிலும் இயற்கை வளங்களைச் சீராக உபயோகித்து வருங்கால சந்ததியினரும் பயன்பெறத்தக்க வகையிலு மக்களின் ஈடுபாட்டினை ஈர்த்துக்கொள்ளும் வகையிலும் திட்டங்கள் அமைந்திட வேண்டும்.