book

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

₹712.5₹750 (5% off)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :630
பதிப்பு :5
Published on :2017
ISBN :9788123409160
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் கனவுகளில் - ஒன்று ஐ.ஏ.எஸ். ஆவதுக்குறித்துதாம்.  அது நணவாகுவதற்கு என்னென்ன வழிமுறைகள் - பயிற்சிகள் - வினா - விடைகள் குறித்த அனைத்து சிறப்பம்சங்களையும் இங்கே பாடமாகத் தந்துள்ளார் நூலின் ஆசிரியர் திரு இறையன்பு.

ஐ.ஏ.எஸ் என்பது செல்வந்ர்களுக்கு மட்டுமல்ல ஏழைக்கும் - பாமரனுக்கும் முயற்சி செய்தால் முடியாத்து ஒன்றுமில்லை எனும் சித்தாந்தத்தை முன்வைக்கிறது. பாடம் ஒவ்வொன்றிலும் விளக்கமளித்து அதற்கான சம்பவங்கள் அல்லது அனுபவங்களை உதாரணமாய் சொல்லும் விதம் அருமை.

"ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்" என்னும் இந்நூலில் முக்கியமாய் தெளிக்கப்பட்டிருக்கும் அல்லது விதைக்கப்பட்டிருக்கும் உள்ளுணரவு;  வெற்றியெனும் மூலமந்திரமே முயற்சிகளின் படியேறி தளராமல், பின்னோக்கமால் முன்னேறினால் ஐ.ஏ.எஸ் ஆவது உறுதி எனும் உன்னத கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்நூலை மொத்தமாய் படித்து முடிக்கும்போது ஒரு வகுப்பறைக்குள்ளிலிருந்து வெளியேறும் உணர்வு ஏற்படும்.  தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளை உள்ளடக்கி தரப்பட்டிருக்கும் இவ்வரிய நூல் எல்லோருக்கும் மிகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.