book

புரட்சித் துறவி

Puratchi Thuravi

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :140
பதிப்பு :3
Published on :2013
Add to Cart

கையில் ஒரு புத்தகம் இல்லாமல் அறிஞர் அண்ணாவைப் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான். எழுதாத நேரங்களில், மேடை ஏறாத நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண் டிருப்பது அவர் வழக்கம்.உயிருக்குப் போராடிக்கொண்டு, மருத்துவமனையில் படுத்திருந்த சமயம் கூட, ஏதோ ஒரு நாவல் படித்துக் கொண்டிருக்கிறார் என்று க.ராசாராம் சொன்னதாக நிருபர் பால்யூ ஒருமுறை தெரிவித்ததும், அது என்ன புத்தகம் என்று தெரிந்து வரும்படி சொன்னார் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.என்பதுதான் அந்த நாவல் எனத் தெரிந்தது. அண்ணா காலமான சமயம் அந்தப் புத்தகத்தைக் கடையில் வாங்கினார் எஸ்.ஏ.பி. தானும் படித்துவிட்டு, என்னையும் படிக்கச் சொன்னார். பெரிய நாவலாக இருந்த அதை அப்படியே மொழி பெயர்க்க வேண்டாமென்றும் சுருக்கமாக எழுதுமாறும் என்னைப் பணித்தார். அண்ணா கடைசியாகப் படித்த புத்தகம் என்ற குறிப்புடன், புரட்சித் துறவி என்ற இந்த நாவலை சுருக்கி, சுமார் 25 வாரங்களுக்கு நான் எழுதினேன். இதை எழுதிய மேரி கொரெல்லியின் உண்மைப் பெயர் மேரி பெக்கே. விக்டோரியா மகாராணி உட்பட இங்கிலாந்தின் பெரிய மனிதர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் முதலான பலரின் நட்பையும், பாராட்டையும் பெற்றவர். ஷேக்ஸ்பியரின் பிறந்த ஊரை அழகுபடுத்தியவர். கத்தோலிக்க மதத்தில் இருந்த சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதையே தன் எழுத்தின் லட்சியமாகக் கொண்டிருந்தார். புரட்சித் துறவி யும் அவரது கருத்தை வரையுறுத்துவதாகவே அமைந்துள்ளது. கதை தெரிஞ்சும் வருகிற சிறுவன் மானுவேல் உண்மையில் ஏசுநாதர்தான் என்பதுபோல அவர் எழுதியிருந்ததைப் பலர் ஆட்சேபித்தார்கள், எதிர்த்தார்கள். பொதுவாகவே ஆண்களை வெறுக்கும் மனோபாவம் கொண்டவர் இவர். எந்த ஆணாவது தொட்டால் சீறிவிடுவார்.இந்த நாவலைச் சுருக்கமாக எழுதியதாலும், அப்போது மொழிபெயர்ப்பு விஷயத்தில் எனக்கு அனுபவம் போதாமல் இருந்ததாலும் புரட்சித் துறவியைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று கூற முடியாது. பாத்திரங்களும் அவர்களின் பெயர்களும் அதிகம். எனினும் வாசகர்கள் இதை ஆர்வத்துடன் படித்துப் பாராட்டினார்கள்.