எனது அரசியல் பயணம்
₹500
எழுத்தாளர் :துக்ளக் ரமேஷ்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :520
பதிப்பு :1
Published on :2018
Add to Cartஅரசியலில் தீவிரமாக இயங்கிவரும் 25 தமிழகத் தலைவர்களையும் வெங்கய்ய நாயுடு, எடியூரப்பா ஆகிய பக்கத்து மாநிலத்துத் தலைவர் களையும் துக்ளக் இதழுக்காகப் பேட்டி கண்டு, அதை நூலாகவும் தொகுத்திருக்கிறார் பத்திரிகையாளர் ரமேஷ். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலிலதாவை மையமாகக் கொண்டிருந்த தமிழக அரசியலில், அவர்களோடு சேர்ந்தும் பிரிந்தும் மீண்டும் சேர்ந்தும் இயங்கிய சில அரசியல் தலைவர்களின் அனுபவங்கள் வழியாக மூவரது இயல்பையும் அணுகுமுறையையும் புரிந்துகொள்ள முடிகிறது. திராவிடக் கட்சிகளோடு இணங்கியும் பிணங்கியும் அரசியல் நடத்திவரும் பொதுவுடைமை இயக்கம், காங்கிரஸ் இயக்கம், பாஜக மற்றும் தலித் இயக்கத்தின் தலைவர்களும் தங்களது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். 1989-ல் முதல்வர் கருணாநிதி இலவச மின்சாரத்தை அறிவித்தார் என்று நினைவுகூர்கிறார், அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் துரைமுருகன். ஆனால், குமரி அனந்தனோ, அத்திட்டம் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்றும் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சுதந்திர தின விழாவில் அறிவிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சியில், இரண்டரை ஏக்கர் நிலம் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. கருணாநிதி அந்த வரம்பை நீக்கி, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார் என்கிறார். இப்படி தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் சில விஷயங்களை இந்தப் புத்தகம் இன்னும் தெளிவாக்கு கிறது. எனினும், இருள் சூழ்ந்திருக்கும் சில பகுதிகளை அப்படியே கடந்து விடவும் முயற்சிக்கிறது.