book

கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக)

Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. கற்பகம்
பதிப்பகம் :Nestling Books (india) Private Limited
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788193477144
Add to Cart

ஆங்கிலத்தில் 'கிளாசிக்ஸ்' (Classics) எனப்படும் பழம்பெரும் கதைப்புத்தகங்கள் பல, சுருக்கி எழுதப்பட்டு சிறுவர்களும் படித்து மகிழும் வண்ணம் *Abridged' வடிவங்களாக வெளியிடப்பட்டுள்ளன. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தும் சிறுவர்களுக்கென எளிய வடிவில் கதைப் புத்தகங்களாக வந்துள்ளன. அலெக்ஸாண்டர் டூமாஸின், 'The Three Musketeers,' 'The Count of Monte Cristo', ஸ்டீவென்ஸனின், 'Treasure Island', 'Kidnapped' போன்ற பல சரித்திரக் கதைகளும், வீரசாகசக் கதைகளும் எளிமையாக்கப்பட்டு இளைய வயதினருக்கெனப் பிரத்தியேகமாக வெளிவந்துள்ளன. தமிழில் கல்கி, சாண்டில்யன் போன்றோரது சரித்திரக் கதைகள் ஏராளமாக உள்ளன. சிறுவர் படித்து மகிழும் வண்ணம் அவற்றை எளிமையான நடையில் சுருக்கி எழுதினால் என்ன என்று எண்ணி முதன்முதலாக, கல்கியின் 'பொன்னியின் செல்வனைச்' சிறுவர்களுக்காக எளிமைப்படுத்தி எழுதினேன். அப்புத்தகம், கோவை விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுப் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுப் பல சிறுவர் சிறுமியரைச் சென்றடைந்தது. கல்கியின், 'சிவகாமியின் சபதம்', நான்கு பாகங்களில், பல்லவ சக்கரவர்த்தி மாமல்லருக்கும், சளுக்கச் சக்கரவர்த்தி புலிகேசிக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் புத்தகம். இதன் சுவையும் சுவாரசியமும் குன்றாமல், சுருக்கி எழுதி, ஒரே புத்தகமாக, 'கல்கியின் சிவகாமியின் சபதம் - சிறுவர்களுக்காக ' என்று எழுதியுள்ளேன். வீரம், நகைச்சுவை, காதல், திகில், சோகம் எல்லாம் கலந்த ஒரு அற்புத சரித்திரக் கதைப்புத்தகமான சிவகாமியின் சபதத்தை இளைய தலைமுறையினரும் படித்து இன்புற வேண்டுமென்பதே எனது அவா. அதனால் இந்நூலை வெளியிட்டுள்ளோம்.