டாக்டர் இல்லாத ஊரில்...
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. மணிகண்டன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cartதேவையில்லாத மனப்பதற்றம்தான் மாரடைப்புக்குப் பல வழிகளில் காரணமாக அமைந்து
விடுகிறது. ""டாக்டர் லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. ஒருவேளை எனக்கு
மாரடைப்பு வந்திருச்சோ ? எதுக்கும் ஒரு ஈ.சி.ஜி. எடுத்துப் பார்த்துருங்க
டாக்டர்'' என்று பதற்றத்தோடு வந்து சொல்லியிருக்கிறார் சங்கர்.
மருத்துவர்களும் அவசரம் அவசரமாக அவருக்கு ஈ.சி.ஜி. எடுத்துப்
பார்த்திருக்கிறார்கள். ஆனால் மாரடைப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை. இது
முதல் தடவையல்ல. இப்படி அடிக்கடி சங்கர் வருவதும் ஈ.சி.ஜி. எடுப்பதும்
வாடிக்கையாகி விட்டது. அவ்வளவு மனப்பதற்றம் அவருக்கு. ஆனாலும், சங்கர்
விஷயத்தில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதில்லை. காரணம், இது போன்ற
கடுமையான மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு மற்றவர்களை விட
இரண்டு மடங்கு சாத்தியம் உண்டு. இளம் பெண்கள் உட்பட எல்லாருக்கும் இந்த
எச்சரிக்கை அவசியம்.