book

திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம்

Thirupur Kumaran Oru Agnipravesam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :74
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

 நாம் எதிர்காலத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்காலம் இளைஞர்களுக்குச் சொந்தம் என்று கூறினார் மாமேதை லெனின். அந்த எதிர்காலத்தைத் தங்களுக்குச்  சொந்தமாக்கிக்கொள்ள இளஞர்கள் அதற்கேற்பச் செயல்படவேண்டும். வீடும் நாடும் போற்றும் அவர்களது செயல் இருக்க வேண்டும்  என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும். பெரும்பான்மையான மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் செயல்பட இளைஞர்கள் ஏராளமானோர் உண்டு. இளமைப் பரிவத்திலேயே நாட்டையும் மக்களையும் பற்றி எண்ணிய இளைஞர்கள் ஏராளம். நாட்டின் விடுதலைக்கும், அதன் உயர்வுக்கும் போராடி உயிர்நீத்தவர்களும் உண்டு.

வசதி படைத்தவர்களை வரலாறு தேடுவதில்லை. ஆனால், மக்களுக்காகப் போராடுபவர்களை வரலாறு என்றென்றும் தேடிக்கொண்டே இருக்கும். வரலாறு தேடிக்கொண்டிருக்கும் பட்டியலில் இடம்  பெற்றவர்களில் ஒருவர் தான் திருப்பூர் குமரன். தியாக உணர்வை,மன உறுதியை, நாட்டுப்பற்றை அறிந்துகொள்ளவேண்டிய ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாக விளங்கி நிற்கும் திருப்பூர் குமரனின் வாழ்க்கைச் சுருக்கத்தை, இந்நூலில் தனக்கே உரிய பாணியில்  எடுத்துக்கூறியுள்ளார் எம். ஏ. பழனியப்பன். எங்களது வெளியீடுகளுக்கு  வாசகர்கள் அளிக்கும் பேராதரவை, இந்நூலுக்கும் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

                                                                                                                                                    - பதிப்பகத்தார்.