book

முப்பது கல்வெட்டுக்கள்

Mupathu Kalvetukal

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. சுந்தரேசவாண்டையார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :கல்வெட்டுக்கள், சரித்திரம், தகவல்கள்
Add to Cart

சென்னைப்பல்கலைக் கழக்கத்தார் வித்துவான் இறுதிநிலைத் தேர்விற்குத் தேர்ந்து அமைந்துள்ள முப்பது கல்வெட்டுக்களுக்கும் சிறந்த குறிப்புரையும் ஆராய்ச்சி விளக்கவுரையும் வினா - விடைகளும் ஒருங்கே மூலத்தோடு அமைந்த இந்நூலை முற்றும் படித்தேன். தற்கால அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் பயின்று வாராத சில சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் உரையாசிரியர் நுணுக்கமான உரைகண்டு, பயிலும் மாணாக்கர்கட்கு எளிதாக்கியுள்ளமை போற்றத்தக்கது. ஒவ்வொரு கல்வெட்டின் கீழும் அமைந்துள்ள அவ்வரசனைப்பற்றிய பொதுக் குறிப்புகள் மாணவரது வரலாற்றுப் பயிற்சிக்குப் பெரிதும் துணைசெய்வனவாம். பொதுச்செய்திகள் என்ற தலைப்பு மாணாக்கர்கட்குக் கல்வெட்டைப்பற்றிய தெளிந்த அறிவைப் பயப்பதாகும். ஆசிரியரது முன்னுரையே கல்வெட்டுப் பயிற்சியில் இறங்கும் மாணாக்கர்கட்கு நல்வழிகாட்டியாக அமைந்துள்ளது. இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள வினா - விடைகள் 1930 - ஆம் ஆண்டு தொடங்கிப்பல்கலைக்கழகத்தார் நடத்தி வந்த தேர்வுகளில் கண்ட சிறந்த வினாக்களுக்கு ஏற்ற விடைகளாக அமைந்துள்ளன. இந்நூலை நன்கு ஆராய்ந்து எழுதிய எனது பேரன்பர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித்துறை ஆசிரியர் வித்துவான் வை. சுந்திரேச வாண்டையார் அவர்கள் கல்வெட்டுத் துறையில் நீண்ட காலப் பயிற்சியுடையவர். இவர்களது ஆராய்ச்சியின் பயனாக வெளிவந்த இந்நூலை மாணவர் உலகம் நன்கு பயன்படுத்தும் என்பது எனது துணிபு.