book

இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

Ilakiyangalil Vaalviyal Sinthanaigal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கோ. சுரேஷ்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :93
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188048908
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சங்ககாலம்
Add to Cart

முன்னோர்களின் செல்வம் நமக்கு எப்பொழுதும் எல்லாவிடத்தும் பயன் கொடுக்காது, ஆனால் முன்னோர்களாகிய சான்றோரகளின் சிந்தனைகள் நமக்கு எக்காலத்தும், எவ்விடத்தும் பலன் கொடுக்கும். இலக்கியங்கள் காலம், இடம், மொழி, மதம், வறுமை, செழிப்பு ஆகியவற்றைக் கடந்து அறிவுச் சிந்தனையை வழங்குபவை. ஒரு காலத்துக்கும், இன்னொரு காலத்துக்கும் இணைப்பும் பாலமாகத் திகழ்பவை இலக்கியங்கள். சான்றோர்கள் பெற்ற ஞானத்தின் சிந்தனைகள், அனுபவத்தின் விளைவுகள் பொன்றவற்றின் அறிவுக் கருவூலங்களாக இலக்கியங்கள் திகழ்கின்றன. சிலர் மருத்துவச் சிந்தனைகளையும், சிலர் மருத்துவச் சிந்தனைகளையும், சிலர் விஞ்ஞானச் சிந்தனைகளையும், சிலர் ஆன்மிகச் சிந்தனைகளையும், சிலர் வாழ்க்கைச் சிந்தனைகளையும், சிலர் தொழில் நுட்பச்சிந்தனைகளையும், சிலர் வேளாண்மை, நல்லாட்சி, நற்பண்புகள், கொடைச்சிறப்பு போன்றவற்றையும் தமது நூல்களின் ஆதார அறிவோடு குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

 நவீன போக்குவரத்துச் சாதனங்கள் தோன்றாத காலங்களிலேயே மேலை நாடுகளோடு ஏற்றுமதி இறக்குமதி தொடர்பு கொண்டும், நவீன மருத்துவ முறை தோன்றப் பெறாத காலத்தில் அறுவைச் சிகிச்சை செய்தும் கடுமையான நோய்களைக் குணப்படுத்தியும், விஷத் தன்மைகளை முறியடித்தும் முன்னோர்கள் வந்துள்ளமையை இலக்கியங்களால் அறியலாம். நல்லவர்கள் துன்பப்படுகின்றபோது அவர்கள் அழைத்தாலும்; அழைக்காதுவிட்டாலும் தெய்வங்கள் மனித உருவில் அறிந்த அறியாத நபர்களாக வந்து அவர்களது துன்பத்தைப் போக்கிர, அவர்களைக் காப்பாற்றியதை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஆகவே நல்லவர்களுக்கு ஆபத்தோ, துன்பமோ நேரிட்டால் அவர்களைக் காப்பாற்ற மனித உருவில் தெய்வங்களே முற்படுவார்கள். ஆகவே இறையெனப்படும் இயற்கையன்னை ஆனவன் எல்லாச் செயல்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாள் என்பதனையும் இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன.