book

கண்விழித்தபோது

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவதேவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123432175
Add to Cart

கண்விழித்தபோது

நிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் மகிழ்வும் தாய்மையுமே மலர்களாகவும் கனிகளாகவும் வெளிப்பட்டுகொண்டிருப்பதையும் அது அறியாது.