book

எழுபது கதைகள்

₹740
எழுத்தாளர் :ஜீ. முருகன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :618
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் கதைத்துவ அக்கறைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்ஞையாக அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முருகன் கதைகள் கிராமத்துச் சூழலை யதார்த்தவாதக் கதைப் பாணியில் ஒரு புகைப்படப் பிரதியைப்போலச் சித்தரிக்கும் தன்மை கொண்டவையல்ல. அதில் தனக்கு விருப்பமோ ஈெடுபாடோ நம்பிக்கையோ இல்லை என்று முருகனும் ஒரு நேர்காணலில் சொல்கிறார். அவர் தன் கதைக் கிராமங்களை ஒரு விசேஷமான இடத்தில், நிலையில் வைக்கிறார். அதாவது அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம் பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்ளோ அல்லது ஞாபகங்களிலோ அல்லது உணர்விலோ கிராமங்கள் உள் பொதிந்து வைக்கப்படுகின்றன. - பா.வெங்கடேசன்