குற்றம் புரிந்தவன்
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390771592
Add to Cart1969லிருந்து 2023 வரை, பல்வேறு காலகட்டங்களில், பலதரப்பட்ட தின, வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு.
பெருமாள் சாமி பூஜையறையிலிருந்து வெளிப்பட்டு காலை உணவை முடித்துக் கொள்வதற்காக டைனிங் டேபிளுக்குப் போய் உட்கார்ந்த போது வாசலில் அழைப்பு மணியின் சத்தம் சிக்கினமாய் ஒலித்து அடங்கியது.
சமையலறையில் ஏதோ வேலையாய் இருந்த மனைவியைப் பார்த்து குரல் கொடுத்தார்.
''திலகம்...! வந்திருக்குறது யார்ன்னு போய்ப் பாரு.''
குக்கரை கீழே வைத்துவிட்டு காஸ் அடுப்பை அணைத்த திலகம், மூட்டு வலியோடு மெதுவாய் நடந்து கதவை நோக்கிப் போனாள். சில விநாடிகளுக்குப் பின் திரும்பி வந்து கணவனுக்கு முன்பாய் ஒரு பெருமூச்சோடு வந்து நின்றாள்.