
கூடு திரும்புதல் எளிதன்று
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஜே. ராஜகுமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789389857481
Add to Cartவானம்பாடிக் கவிதைகளில் வேர்பிடித்து, நவீனத்துவத்தில் கிளைவிரித்துப்
பூத்திருக்கிற கவிதைமொழியில் தேர்ந்த கவிஞர் தங்கம் மூர்த்திக்கு மரபார்ந்த
நவீனத்தோடு கூடிய எளிமையும் தெளிமையும் இயல்பாக கைவருகிறது.மெளனத்தைப்
பிழிந்தால் சொட்டுச்சொட்டாய் சொற்கள் உதிர்வதும், வானத்தில் எழுதினால்
நட்சத்திரங்களாவதும், காற்றில் எழுதினால் பறவைகளாவதும், கவிதைக்கரத்தால்
நதியைத் தொட அது திறந்துகொள்வதும், தமிழ்க் கவிதைக்கு அழகியல் மிளிரமிளிர
அவர் வழங்கியிருக்கிற புத்தம்புது படிமங்கள். அவை வாசிப்பின்பத்தின்
உச்சத்துக்கு நம்மை அழைத்துச்செல்பவை. அவை முழுமையான தனித்துவத்தோடும்,
தன்னளவில் ஒளிர்கிற ஒரு தத்துவச் சாயலோடும் வெளிப்படுகின்றன.பல்வேறு
சூழல்களில் இவரது கவிதைகளில் அணில்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே
இருக்கின்றன. குயில் பறந்து சென்ற பிறகும் அதன் பாடல் இலைகளின் சலசலப்பில்
தங்கிவிடுவதைப்போல தொகுப்பை வாசித்து மூடியபின்பும் நமக்குள்
ஓடியாடியவாறிருக்கின்றன அணில்கள்.எல்லாம் படித்து, எல்லாம் மறந்தபின்
வடிகட்டிய மீதமாய் நமக்குள் தங்குவதுதான் ஒரு உன்னதமான படைப்பு. அவ்வகையில்
தமிழ்க் கவிதையின் நெடிய வரிசையில் இக்கவிதைத் தொகுப்பு
சேர்ந்துகொள்கிறது.
