
உண்மைகள் பொய்கள் கற்பனைகள்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரிசங்கர்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789389857450
Add to Cartநவீன மனிதன் நிஜத்தை, யதார்த்தத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவனது மனம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே சுற்றி வந்துகொண்டிருக்கிறது. அதற்கு நேர் எதிராக இருக்கும் கள நிலவரமும் அவனுக்கு அச்சமூட்டுபவையாகவே இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே அவன் சமூக ஊடகங்களில் இயல்புக்கு மாறாக இயங்கிக் கொண்டிருக்கிறான். உண்மைகளை மறைத்து தனக்காக ஒரு போலி அடையாளத்தை, போலி துணையை உருவாக்கிக்கொள்கிறான்.அது அவன் தெரிந்தே செய்யக்கூடிய ஒன்றாக இருப்பதில்லை. கடந்த முப்பது ஆண்டுகளாக மெதுவாக மாறிக்கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தின் பக்கவிளைவுகள்தான் அவை. இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலி மதிப்பீடுகளுக்கு இரையாகி, இயந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை இது.
