book

ஒரு வசீகரமான கைம்பெண்ணின் முகம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷிஹாப் கானம், பிரியா ராஜ்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789395285117
Add to Cart

அமீரக எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பாகிய இந்தப் புத்தகம்தான் அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு நான் மொழிபெயர்த்த முதல் கவிதை அல்லாத தொகுப்பாகும். ஏற்கெனவே இலத்தீன் மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை தற்போது பிரியா தமிழிலும் மொழிபெயர்த்து எங்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இது நிச்சயம் இந்தியர்களுக்குப் பிடித்தமான ஒரு புத்தகமாய் இருக்கும். ஏனெனில், இக்கதைகளில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களும், கதை நாயர்களும் அவர்களே. பல்வேறு வகையான வடிவமைப்புகளிலும், தலைப்புகளிலும் உள்ளடங்குவதாயும், தலைப்புகளிலும் உள்ளடங்குவதாயும், காதல், யதார்த்தவாதம், பின்நவீனத்துவம் போன்ற பரந்துபட்ட எழுத்துப் பாணியைக் கொண்டதாயும் இப்படைப்புகள் அமைந்துள்ளன. மேலும், அமீரகத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இக்கதைகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் சமீபத்திய வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிப்பதாயும் அமைந்திருக்கின்றன.