book

அப்பாவின் நண்பர்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ஸ்டாலின்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
ISBN :9789389857252
Add to Cart

சாயங்களும் பூச்சுகளுமற்ற காட்சிகளையும் வண்ணங்களற்ற கனவுகளையும் விரித்து சொல்லும் ஸ்டாலின், ஏதேனும் ஒரு வரியில் அல்லது சொல்லில் முழுவதுமாக கவித்தன்மையை ஏற்றி விடுகிறார். அந்த வரியோ சொல்லோ ஒரு மாயக் கண்ணாடிபோல் மேலும் கீழுமாக அசைந்து மொத்த காட்சிகளையும் மாற்றி போடுகிறது. - வேல்கண்ணன் வடதமிழகத்தின் பாசாங்கற்ற சிறு நகர வாழ்வின் அனுபவங்களும், அங்கு திகழும் மனித மனங்களின் எளிமைகளும் இக்கவிதைகளின் அடியோட்டம். ஒரு நிலத்தின் குறிப்பிடத் தக்க காட்சிகளை இக்கவிதைகள் காட்சிப் படுத்துகின்றன. இக்காலகட்டத்தின் போலித்தன்மையான படிம அமைப்புகளுக்கு மத்தியில் இக்கவிதைகளில் நிலமும் அதன் மக்களும் பளிங்கைப்போல காட்சி தருவதைக் காணமுடிகிறது. - திருக்கூனன் கண்டராதித்தன்