
அம்மாச்சி
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யா. சம்ராஜ்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :113
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391994006
Add to Cartவயது செல்லச் செல்ல
வரிசை கட்டிவரும் ஆசைகளில்
இதுதான் முதலாசை
பெரியாசை
பேராசையும் கூட
எந்த நாட்டில் செத்தாலும்
செத்த உடலைப்
பொத்தி எடுத்து வந்து
உள்ளூர் தண்ணீரில்
குளிப்பாட்டி
ஊரார் தொட்டழுக
காட்டுநெடுங்குளம் மண்ணும்
கரையானும் மட்டுமே
தின்று தீர்க்க வேண்டும்
இந்தத் திருநாள்
வைபவத்தைக்
கடவுளும் காலனும்
கலந்துரையாடி
ஓய்வுநாளில் நடத்தினால்
உற்றாகும் மற்றாரும்
வந்து வந்து
வழியனுப்ப வசதியாகும்
பிறந்த மண்
எனது இரண்டு கண்.
