book

அச்சம் + அறியாமை = கடவுள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. அறிவுக்கரசு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2085
Out of Stock
Add to Alert List

ஆய்வாளர்களின் கருத்துப்படி. உலகில் “நாத்திகம்" என்பது இந்தியப் பகுதியில்தான் முதன் முதலில் தொடங்கியது. லோகாயதம். சார்வாகம் ஆகிய தத்துவங்கள் அறிவுப் பூர்வமாக நாத்திகத்தை முன்னெடுத்தன. ஒருவன் (இல்லாத ஒன்றை) இருக்கிறது எனக் கூறத் தொடங்கிய மறுகணமே இல்லை என்கிற உண்மையைக் கூறும் குரலும் எழுந்துள்ளது. கடவுளே கூறியதாகக் கதைக்கப்படும் மத நூல்களிலேயே இதற்கான ஆதாரங்களைக் காணலாம். ஆளுவோரின் ஆதரவுடன் ஆதிக்கச் சக்திகள் இந்தத் தத்துவங்களை அழித்துவிட்டன. அறிவையும், ஆராயும் தன்மையையும் வலியுறுத்திய பவுத்தத்தை மண்ணை விட்டே விரட்டிவிட்டன. பூசாரிகளுக்கு இதில் பெரும் பங்கு. இந்தியாவைப் பொருத்த மட்டில் பூசுரர்களே பூசாரிகளாக இருந்த (இருக்கும்) நிலை.
கடவுள் இருக்கிறது என எண்பிக்கும் பொறுப்பு அப்படிக் கூறுவோர்க்கு மட்டமே உண்டு. ஆனால், அதைச் செய்ய அவர்களால் இயலவில்லை. இத்தனைக் காலமாக! எதைக் கண்டு அச்சப்பட்டார்களோ, எதைப் பற்றி அறிவுப்பூர்வமாக ஆய்ந்து பார்க்க இவர்களால் முடியவில்லையோ, அதையெல்லாம் “கடவுள்” எனக் கூறி வெற்றிடத்தை நிரப்பி விட்டார்கள். அப்படிப்பட்ட வெற்றிடம் பற்றி அறிவியலின் கருத்து என்ன என்பதை இந்நூலில் விளக்கியுள்ளேன். சுருக்கமாக!
காலங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும் பெரும் பொருள் இது! அந்த விவாதத்தின் சிறு பகுதியாக இருந்தாலும் சிறப்பான பகுதி இது.நூலைப் படித்து, அறிந்து, ஆய்ந்து, தெளிந்து, முடிவுக்கு வாருங்கள்.