book

ஒரு ராஜகுமாரன்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். குமார்
பதிப்பகம் :கிழவன் பதிப்பகம்
Publisher :kizhavan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

படிப்பும் பொருளீட்டலும் பெண்ணுக்குச் சிறகுகள் பூட்டத்தானே? ஆனால், சில நேரம் அதுவே விலங்காகி விடுகிறதோ என நம்மை யோசிக்க வைக்கிறாள் எழுத்தாளர் அமரந்த்தாவின் ‘வருவான் ஒரு ராஜகுமாரன்’ கதையின் நாயகி. பொருளாதாரச் சுரண்டலும் ஒருவகை விலங்குதானே? மறைமுகமாகப் பெண்கள் எதிர்கொள்ளும் வஞ்சகம்தானே? பதினெட்டு வயது முதல் குடும்பத்துக்காகப் பத்து வருடங்களுக்கும் மேலாக வேலைக்கு ஓடிக்கொண்டிருப்பவள் அவள். பள்ளி செல்லும் தம்பி, தங்கைகள், அப்பாவி அம்மா, பொறுப்பில்லாத அப்பா என்று குடும்பத்திலுள்ள எட்டுப் பேருக்குமான பொறுப்புகளையும் தாங்கும் சுமைதாங்கி யாய்த் தான் மாறிய கதையை நாயகியே நமக்குச் சொல்கிறாள்.