
மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ஆனந்தி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2021
Add to Cartசெம்மொழித் தமிழின் சிறப்புக்குத் தமிழ்மொழியில் தோன்றியுள்ள கற்பனை நலமும் காவிய வளமும் நிறைந்து கவிதை அழகுடன் திகழும் சிற்றிலக்கியங்களும் காரணமாகும். சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு என்பது மரபு எனினும் இன்றைய நிலையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் சிறப்பாகக் கருதப் பெறுபவை பிள்ளைத் தமிழ் உலா, பரணி, கோவை போன்றவை. அவற்றுள் ஒன்று உலா. தன்னகரில்லாத தலைவன், இறைவன் வெற்றியுலாவாக, வீதியில் செல்லும் பொழுது எழுபருவப் பெண்களும் அவரவர் நோக்கில் அவனைக் கண்டு காதல் கொள்வதாக அமையப் பாடுவது உலா. அந்த வகையில் மதுரை இறைவன் வீதியுலா வருவதை விதிந்து பாடுவதாக அமைந்திருப்பது '' மதுரைச் சொக்கநாதருலா'' என்னும் இந்த நூல்.
