தமிழக வரலாறும் பண்பாடும்
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் மா. இராசமாணிக்கனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :504
பதிப்பு :5
Published on :2016
Add to Cartதமிழ்நாட்டு அரசு எழுபதுகளில் முதுகலை பட்டப்படிப்பு வரை அனைத்து துறைகளையும் தமிழிலேயே கற்பிப்பது என்ற பெருமுயற்சி ஒன்றை எடுத்தது. அப்போது எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதல்வர். நெடுஞ்செழியன் கல்வியமைச்சர். அதற்காக அத்தனை பாடநூல்களும் தமிழில் எழுதப்பட்டன. குறிப்பிடத்தக்க நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஏறத்தாழ இரண்டாயிரம்நூல்கள் அவ்வண்ணம் புதிதாக எழுதப்பட்டும், தமிழாக்கம் செய்யப்பட்டும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டன.
ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. தமிழில் பட்டப்படிப்பு படிக்க பெரும்பாலானவர்கள் முன்வரவில்லை, ஏனென்றால் ஆங்கிலம் வேலைவாய்ப்புச் சந்தையில் இன்றியமையாததாக இருந்தது. ஆனால் அதன்பொருட்டு உருவாக்கப்பட்ட நூல்கள் தமிழுக்கு மிகப்பெரிய அறிவுக்கொடை. நான் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி நாகர்கோயிலில் ஓர் அறைமுழுக்க அடுக்கடுக்காக அந்நூல்கள் இருப்பதை கண்டிருக்கிறேன்.