book

ருஷ்யப் புரட்சியாளர் ஸ்டாலின்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். இராமகிருஷ்ணன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

இது ஒரு வாழ்க்கைக் கதை. சாமான்ய தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து, ஜகத் தலைவனாக வளர்ந்த செம்மலின் ஜீவிய சரித்திரம். வரலாறு கண்டறியாத வீரத்துக்கும் விவேகத்துக்கும் உறைவிடமாக விளங்கிய உருக்கு மனிதனின் கதை. நாடுகள் விடுதலை பெற்று, சமுதாய நீதியை நிறுவி. நல்லுறவு கொண்டு, சமாதானத்தைப் பாதுகாத்து, வளமான வாழ்வைப் படைத்துப் பயன் பெற வேண்டுமென்று விரும்புவோர் அனைவரும் பயில வேண்டிய கதை. தாழ்வுற்றுக் கிடக்கும் தமிழகம் தலைநிமிர்ந்து. இல்லாமைக்கும் கல்லாமைக்கும் முடிவுகட்டி, பல்கலைகள் பூத்துக்குலுங்கும் புதிய சமூகத்தை அமைக்க வேண்டுமென்ற உயிர்த்துடிப்புள்ளவர்கள் படித்து உணர வேண்டிய கதை. எனவே, அந்தக் கதையைப் புத்தக வடிவில் எழுதத் துணிந்தேன். அதன் விளைவே, உங்கள் கரங்களில் தவழும் இந்த நூல், இனி அதன் நிறை குறைகளைத் தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு, மலர் நிலையத்தாரின் தராத ஊக்கமும் சங்கர்ஸ் அச்சகத்தாரின் ஒத்துழைப்பும் இந்த நூல் காலத்தில் அச்சிட்டு வருவதற்குப் பெருந்துணையாக இருந்தன, புத்தகத்தின் பொலிவுக்கு அவர்களே காரணம்! அவர்களுக்கு என் நன்றி! வணக்கம்