book

உணவே உயிரே

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசிமதன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

திருமண வீட்டில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு எழுந்தார் ஒருவர். ஒருகையில் செல்ஃபோன், கைக்குட்டை. மறுகையோ எச்சில்... எழுந்த வேகத்தில் இடுப்பு வேட்டி நழுவ ஆரம்பித்தது! அவரிடமிருந்து ஆ... ஊ... என்று அலறல் பிறந்தது. உடுக்கை இழந்தவன் இடுக்கண் களைய நண்பர் வேண்டுமே! நல்லவேளை. பாய்ந்து வந்து ஒரு கிருஷ்ண பரமாத்மா அவரது மானம் காத்தார், “தாங்க்ஸ்டா என்று மிஸ்டர் சாப்பாடு அசடு வழிந்தார். உரிமையுடன் நண்பர் “ஏண்டா ... அளவா சாப்பிடக் கூடாதோ... வேட்டி நிற்காதபடியா சாப்பிடறது...'' என்று கிண்டலடிக்க, "வேஷ்டி நழுவுதே... அதுதான் நம்ப சாப்பாட்டு அளவே" என்று நியாயம் சொன்னார்..!சாப்பிடும் ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அந்த ஆசை நம்மையே சாப்பிட்டுவிடும் என்பது பலருக்கும் புரிவதில்லை! நிறைய சாப்பிடுவதை விட சத்தான, சரியான, சரிவிகிதமான சாப்பாடு சாப்பிட வேண்டும். உணவின் நியதிகள் ஒருவருக்குச் சொல்வது மற்றவருக்குப் பொருந்தாது. அவரவர் தரத்திற்கும் உடல் திறத்திற்கும் வேலை முறைக்கும் ஏற்ப சாப்பிடத் தெரிய வேண்டும்.கவனம், விழிப்பு மிகமிக அவசியம். சாப்பாடுதானே...!! இதென்ன பெரிய விஷயமா? என்று உதட்டைப் பிதுக்க வேண்டாம். உங்களை உயிரோடு வைப்பதும் உயிரைப் பறிப்பதும் உணவின் திறன். அதுபற்றிய சின்ன விழிப்பை உண்டாக்க 'உணவே உயிரே' என்று ஓர் உரை நிகழ்த்தினேன். அதனை ஒலியிலிருந்து எழுத்துக்கு மாற்றிச் செதுக்கி இந்தப் புத்தகம் உருவானது.சைவம், அசைவம் பற்றி கூட உரத்த சிந்தனை பிறந்தாக வேண்டும். வெறும் உணர்ச்சிபூர்வமான சண்டையாக, மதத்தன்மை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே அது பேசப்படுகிறது. ஆராய வேண்டிய களங்கள் நிறையவே இருக்கின்றன.உலகில் அசைவம் சாப்பிடுகிறவர்கள் சாப்பிடுவதற்காக ஆடு, மாடு, கோழி, பன்றி வளர்க்க வேண்டி உள்ளது. அவை