book

கணக்கும் வழக்கும்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் L. கைலாசம்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் என்னை இந்த நிலைக்கு உயர்த்த, எனது வாழ்வு திசை மாறாமல் அமைய, அன்புடனும் பாசத்துடனும் துடுப்பாக உதவியவர்களைப் பற்றி இந்நூலில் விவரமாகச் சொல்லியுள்ளேன். வைகை, பொன்னி, நொய்யல் என்று அழகிய ஆறுகளையும், அதனை ஒட்டி இருக்கும் வயல்வெளிகளையும், பெரும் விருட்சங்களையும் அதிலிருக்கும் பல கோடி உயிரினங்களையும் பார்த்து பார்த்து பரவசப்பட்டு, புதுப்புது சொர்க்கங்களை கண்ட எனது வாழ்வினை இந்த நூலில் எழுதியுள்ளேன். மாபெரும் எழுத்தாளர் பி.எம்.கண்ணன் அவர்கள் எனது வாழ்க்கைப் படகின் வேகத்தை குறைத்து, நிதானமாக்கி ஆசையினால் வரும் தீமையை, மறக்க முடியா வேதத்தைக் கற்றுக் கொடுத்து நான் ஏமாளியாதிருக்கப் பாதுகாப்பு கவசம் கொடுத்தது பற்றியும், துணைவியும், மகன்களும், தோழியும் எனக்கு அள்ளி அள்ளி கொடுத்த ஆனந்தத்தையும், ஆராய்ச்சி பொன்மானை பிடிக்க உதவியவர்களைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன். எனது எழுத்தார்வத்துக்கு உதவிய வானதி திருநாவுக்கரசரும், ராமநாதரும், நான் கண்ட மலர்ச்சோலை மங்கை முதல் விநோதினி என்று இன்றும் தொடர்ந்து என்னை உலகம் அறிய செய்தது பற்றியும், சிப்பிக்குளத்தில் நீராடி மீன்காரியின் பின்சென்று முத்தெடுத்தது பற்றியும், குற்றவியல் மற்றும் தணிக்கைத் துறையில் செய்த, செய்யும் ஆராய்ச்சிகளைப் பற்றியும், அலுவலக வாழ்வினைப் பற்றியும் விரிவாகவே குறிப்பிட்டுள்ளேன். வாழ்வின் விளிம்பில் நின்று எங்கே தெய்வம் என்று காத்திருக்கும் எனது நிறைவாழ்வின் சம்பவங்கள் இந்த நூலைப் படிப்பவர்களுக்கு நிச்சயமாக உதவும்.