தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :464
பதிப்பு :2
Published on :2017
Add to Cartபொதுவாக, சங்க காலத்திற்கு அடுத்து வரும் காலகட்டத்தில்தான் பெரும்பான்மையான நீதிநூல்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நீதி நூல்கள் பல்கிப் பெருகியிருக்க வேண்டும் என்பர். தமிழகத்தில் களப்பிரர்களின் இடையீடு காரணமாக மூவேந்தர்களின் ஆட்சி கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது எனலாம். களப்பிரர்கள் வேற்றுமொழியினர்; வேற்றுச் சமயத்தவர். இவர்கள் காலத்தில் புத்த வழிபாடும், பாலி, பிராகிருத மொழிச்செல்வாக்கும் மிகுந்தன. சங்க காலத்திலேயே பௌத்த, சமணக் கொள்கைகள் ஓரளவு தமிழகத்தில் தலைகாட்டியிருந்தன. ஆனாலும் நாட்டை ஆள்வோரே அவற்றை ஆதரித்து, வலிதில் புகுத்திய காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் தொடங்கியது எனலாம். பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் கைப்பற்றிய இக்களப்பிரர் பௌத்த சமயத்தைத் தென்னகத்தே பரப்ப முயன்றனர். கி.பி.நான்காம் நூற்றாண்டில் சோழநாட்டு உறையூரினனாகிய புத்ததத்தன் அபிதம்மாவதாரம், விநயநிச்சயம் என்ற இரு நூல்களைப் பாலி மொழியில் எழுதி வெளியிட்டான். அச்சுதவிக்கந்தன் என்ற களப்பிர மன்னன் காலத்தில்தான் விநயநிச்சயம் என்ற நூல் எழுதப்பட்டதாக அவனே குறிப்பிட்டுள்ளான். அக்காலத்தில் பௌத்த சமயக் குருமார்கள் இருபதின்மர் காஞ்சியில் வாழ்ந்தனராம். இவை தமிழும் தமிழ் இலக்கியமும் அடைந்த பின்னடைவைச் சுட்டுவன.