book

இலக்கணக் கோட்பாடுகள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை ந. சொக்கலிங்கம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :391
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயர் ஆய்வுத்துறை திராவிட மொழி தொடர்பாக பல துறைகளில் ஆராய்ந்து வருகிறது. அவற்றுள் ஒப்பிலக்கணம், ஒப்புமை மொழியியல் (Contrastive Linguistics) கிளை மொழிகள், சமூக மொழியியல், தென்னகப் பழங்குடி மக்களின் மொழிகள், திராவிட மொழிகளைப் பிற மொழியினருக்குக் கற்பிக்கும் மொழி ஆய்வு, தமிழ்மொழி வரலாற்று இலக்கணம், திராவிட மொழி மரபு இலக்கணங்களின் மதிப்பீடு ஆகிய துறைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் இலக்கண மதிப்பீட்டு ஆய்வில் இத்துறை பலவேறு பணிகளைப் பலவேறு நிலைகளில் புரிந்து வருகிறது. பழைய இலக்கணங்களைத் தற்கால மொழியியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அவற்றில் மறைந்து கிடக்கும் சிறந்த மொழியியல் கோட்பாடுகளை வெளிக் கொணர்வதன் மூலம் மொழியியல் வரலாற்றில் (History of Linguistics) அவற்றிற்கு இடமளிக்க வழிவகை செய்வதும் இன்றைய தலைமுறையினர் பழைய இலக்கணங்களின் உண்மையான சிறப்பையும் குறை நிறைகளையும் உணர்ந்து இலக்கண ஆராய்ச்சியிலும் மொழியியல் ஆராய்ச்சியிலும் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஈடுபாடு கொள்ள நல்ல வாய்ப்பினை அளிப்பதும் இலக்கண மதிப்பீட்டுத் துறையில் இதுவரை செய்த பணிகளில் குறிப்பிடத்தக்கனவாகும். இலக்கண நூல்களைப் பல்வேறு ஆராய்ச்சிப் பட்டங்களுக்கு எடுப்பதுடன் அவற்றை நூல் வடிவில் வெளியிட்டு மொழியியல் மாணவர்களுக்கும் பிறருக்கும் பயன்படுமாறு செய்வதும் இதன் பணியாகும்