மனுசங்க
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து வாழ்வில், மரபில், சடங்குகளில் எண்ணற்ற பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நூல்கள் எழுதப்பட்டிருக்கலாம். அவை யாவும் கல்யாணி ராகத்தை நாழியால் அளப்பது போலவே இருக்கும். அல்லது அந்தகன் வேழத்தைத் தடவிப் பார்த்து அதன் வடிவம் நிர்ணயிப்பது போலவும்.
தமிழ் "இந்து" நாளிதழில் மண்மணம் என்ற பகுதியில் கி.ரா. எழுதி வந்த 'மனுசங்க' தொடர் தற்போது நூல்வடிவம் பெறுகிறது. அனேகமாக 93 வயதில் நாளிதழ் ஒன்றில் தொடர் எழுதிய மூத்த எழுத்தாளர் கி.ரா. வாகத்தான் இருக்க முடியும். கி.ராவிடமிருந்து அறிந்து கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் இன்னும் ஏராளமாய் விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கிறதென்பதையும், அவர் எழுத்தில் கொடுத்ததை விடவும் எழுதாததே எப்போதும் அதிகம் என்பதையும் கி.ராவை தொடர்ந்து படிக்கிற ஒவ்வொரு வாசகனும் உணர முடியும்.
கி.ராவை 'இந்து' நாளிதழில் தொடர் எழுத ஊக்குவித்து அவரிடமிருந்து விஷயங்களைத் தருவித்த 'தி இந்து' நாளிதழ் ஆசிரியர் குழுவிற்கும், இந்நூலுக்கென கி.ரா. பற்றிய விரிவான கட்டுரையளித்த திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கும் அன்னம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழுக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் - பெருமிதம் கி.ரா. அவர் காலத்தில் அவரைக் கொண்டாடுவோம்.