book

இது உங்களுடைய கதை அல்ல

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கருவூர் கன்னல்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

கருவூர் அருகில் தண்ஆன்பொருநை (அமராவதி இக்கால வழக்கு) ஆறு பாய்ந்தது. அந்த ஆற்று மணலில் அக்காலத்தில் மகளிர் தெற்றி விளையாடுவர். (அண்மைக் காலத்தில் விளையாடப்பட்ட பாண்டி விளையாடுதான் சங்ககாலத் தெற்றி விளையாட்டு). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை முற்றியிருந்தான். கருவூர் அரசன் சேரன். அவனது காவல்மரம் போந்தை எனப்பட்ட பனை. சோழன் அதனைக் கோடாரியால் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தான். இதனை வெட்டும் ஓசை அவ்வூர் அரசனுக்கு நன்றாகக் கேட்டது. கேட்டும் அதனைப் பொருட்படுத்தாமல் சோழனுக்குப் பயந்து சேரன் கருவூர் கோட்டைக்குள் பதுங்கிக்கொண்டிருந்தான். இப்படி அஞ்சுபவனோடு போரிடுவது நாணத்தக்க செயல் என்று புலவர் ஆலத்தூர் கிழார் சோழனுக்கு அறிவுரை கூறினார். சோழனும் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினான்