
ஊசிகள்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் மீரா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2010
ISBN :9789380220505
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cartநூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றானவர் . மீரா என்ற பெயரைப் படித்து விட்டு இன்றைய இளைய தலைமுறையினர் பெண் என்று நினைக்கக் கூடும் .எழுத்தாளர் சுஜாதா போல இவரும் ஆண் தான் .மீ . ராஜேந்திரன் என்ற இயற்ப்பெயரை மீரா என்று சுருக்கி புனைப்பெயர் வைத்துக் கொண்டவர் .இவரது கனவுகள் =கற்பனைகள் =காகிதங்கள் அன்றைய காதலர்களின் கரங்களில் தவழ்ந்த புகழ் பெற்ற காதல் கவிதை நூல். அந்த நூல் காதலுக்குப் பெருமை சேர்த்தது .இந்த நூல் சமுதாயச் சாடல் மிக்க நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா காதலும் சமுதாயச் சாடலும் எழுதியதால்தான் என்றும் நினைக்கப்படுகிறார் .மதுரை புத்தகத் திருவிழாவில் அவரது நூல்கள் இன்றும் நிறைய விற்பனையானது .காதல் மட்டுமே எழுதி இருந்தால் இந்த அளவிற்கு புகழ் கிடைத்து இருக்காது .காதல் கவிதை மட்டுமே எழுதும் கவிஞர்கள் சமுதாயச் சாடல் கவிதைகளும் எழுத முன் வர வேண்டும் .
இந்த நூலின் முதற்பதிப்பு 1974 ஆண்டு வெளி வந்தது .தற்போது எட்டு பதிப்புகளைத் தாண்டி வந்து விட்டது .அவர் அன்று எழுதிய அரசியல் சாடல் கவிதைகள் இன்றும் பொருந்துவதாக உள்ளது. அரசியல்வாதிகள் என்றும் மாறுவதே இல்லை என்பதை உணர்த்துகின்றன .நூலின் அணிந்துரையில் புதுமையாக ரகுமான் ,பாலசுந்தரம் , நூல் ஆசிரியர் கவிஞர் மீரா இவர்கள் பேசும் நடையில் உள்ளன .
ஊசிகள் என்பது நூலின் தலைப்பு .தவறு செய்பவர்களை மனசாட்சி என்னும் ஊசி கொண்டு குத்துவதுபோல எழுதி உள்ளார் .
