book

ரணங்களின் மலர்ச்செண்டு

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாண்ஜி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :1
ISBN :9789387499096
Out of Stock
Add to Alert List

கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம்.விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர்.கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெருநிலைக்கு முனையும் புத்தத் துறவியைப் போலவும் நள்ளிருள் நிலாவின் மௌன நகர்ச்சியைப் போலவும் சதா காலமும் எண்ணமும் எழுத்துமாக வாழும் பவித்ரன் வண்ணதாசன்.இவரது உலகில் அன்பு உண்டு. ஆரவாரமில்லை; சமயமும் இல்லை. சமயோசிதமும் இருக்காது.மரமாய் நிழலாய் கனிந்த மனிதர்களின் வாழ்வும் காட்சியும் காட்சிப்பிழைகளும் கொண்டவை இவரது கவிதைக் கணங்கள்.