book

பொதுக் கட்டுரை எழுதும் முறை (மாதிரி கட்டுரைகளுடன்)

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரு. சம்பந்தம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2002
Add to Cart

 ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! இப்பகுதியில் கட்டுரை எழுதும் முறை பற்றிக் காண்போம். ஒருவர் தம் உள்ளக் கருத்துகளை வெளியிடும் வாயில்களாக அமைவன, அவர்தம் பேச்சும் எழுத்தும் ஆகும். இவற்றுள் எழுதுதல் என்பது,    தனித்திறன்.    அவ் எழுத்து,  கதையாகவோ,  கட்டுரையாகவோ வெளிப்படலாம். கட்டுரை எழுதும் திறன் பற்றி இங்குக் காண்போம்.
 
‘ஒரு பொருளைப் பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை.’ ‘கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.’  உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை.  ‘அழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கிறோம்’. இவ்வாறு, அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர்.
 
சுருக்கமாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி, ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் ‘கட்டுரை’ எனலாம்.