book

சங்கத் தமிழ்க் குறிப்புப் பொருள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. முத்துச்சாமி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :262
பதிப்பு :2
Published on :2015
Add to Cart

தமிழ் உரிமையாளர்களால் அடையாளங் காணப் பெறாப் பெரும் புதையல். தற்செயலாய் இப்புதையலைக் காண நேரிட்ட ஐரோப்பி யர்கள் ஒருபுறம்; தமிழின் தனித்தன்மையையும் ஆளுமையையும் மட்டம் தட்டித்தட்டி, அதனைப் பிற தென்னிந்திய மொழிகளைப் போல வடமொழி வண்ணமாக மாற்ற முயன்றி முயற்சிகள் மறுபு றம். இரண்டிற்கும் இடையே கிடந்து தத்தளித்துத் தத்தளித்துத் தமிழ் கரையேறிய காலம் இது. இக்கருத்தை மெய்ப்பிப்பது தமிழின் குறிப் புப் பொருட்கோட்பாடு. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை வடமொழியிலிருந்தே குறிப் புப் பொருள் கோட்பாடு தமிழுக்கு வந்ததாகக் கருதிக் கொண்டு தமிழ்நூல்களின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளினார். ஆயின் பின் னர் வந்த ஐரோப்பிய அறிஞர் ஜார்ஜ்.எல். ஹார்ட், வடமொழிப் பேராசிரியர் கோ. சுந்தரமூர்த்தி முதலியோரால் குறிப்புப் பொருள் கோட்பாடு இந்திய மொழிகளில் முதலில் தமிழில்தான் தோன்றிய து என நிலைநாட்டப் பெற்றபின், தமிழ் நூல்களின் காலம் இயல்பாகவே முன்னுக்குச் சென்றது. இதனைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தமிழின் பெருமை யை நிலைநாட்டும் பல்வேறு கூறுகளில் சிறப்பிடம் பெறத்தக்கது குறிப்புப்பொருள் கோட்பாடு எனலாம். தமிழில் நீங்கள் ஒரு கடுகைத் தேடிப் போனால் ஒரு பெருங் கட லைக் கண்டடைவீர்கள். அத்தகைய இலக்கியச் செழுமையும் பரப் பளவும் உடையது தமிழ். உலகின் உயர் தனிச் செம்மொழிகளோ டும், பிற மொழிகளோடும் ஒப்பிட்டுத் தமிழை ஆராயும் ஓர் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றினால் தான் தமிழின் இடத்தை உலக இலக்கியங்களின் அடிப்படையில் ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய இயலும். தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தும், அவர்களின் பொருளியல் பின்னடைவு மொழியின் பின்னடைவாக உள்ளது. சேர சோழ பாண்டியர்களுக்குப்பின் பேணுவாரற்ற நிலையில் தமிழ் உள்ளது. கோடி கோடியாய்த் தமிழ் ஆய்விற்கு அள்ளித் தரும் வள்ளல் களை எதிர்பார்த்து எதிர்பார்த்துத் தமிழ் தவம் கிடக்கிறது. அந்த நாள் விரைவில் கிட்டுவதாக; தமிழர்களின் தன்னம்பிக்கை வளர்வதாக.