book

தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி

₹427.5₹450 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா. கணபதி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1040
பதிப்பு :31
Published on :2018
Add to Cart

ஜீவாத்மாவுக்குப் பரிசுத்தி ஏற்படுவதற்காக நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று சொன்னேன். அவை கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அன்ன ப்ராச‌னம், சௌளம், உபநயனம், குருகுலவாஸத்தில் செய்ய வேண்டிய பிராஜாபத்தியம் முதலிய நாலு வேத விரதங்கள், அது முடிந்ததும் செய்கிற ‘ஸ்நானம்’, பிறகு விவாஹம், அதன்பின் கிருஹஸ்தன் செய்யவேண்டிய ஐந்து நித்ய கர்மாக்களாகிய பஞ்ச மஹா யக்ஞங்கள் ஆக, இதுவரை மொத்தம் பத்தொன்பது; இதோடு கிருஹஸ்தன் செய்ய வேண்டிய பாக யக்ஞங்கள் ஏழும், ஹவிர் யக்ஞங்கள் ஏழும், ஸோம யக்ஞங்கள் ஏழும் ஆக யக்ஞங்கள் இருபத்தொன்றும் ஸம்ஸ்காரங்களே ஆகும். 19+21=40 ஸம்ஸ்காரம்.அஷ்டகை (அன்வஷ்டகை) , ஸ்தாலீபாகம், பார்வணம், ச்ராவணி, ஆக்ரஹாயணி, சைத்ரி, ஆச்வயுஜி என்ற ஏழும் பாக யக்ஞங்கள். அக்னியாதானம், அக்னிஹோத்ரம், தர்சபூர்ண மாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸெளத்ராமணி என்ற ஏழும் ஹவிர் யக்ஞங்கள். அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்னும் ஏழும் ஸோம யக்ஞங்கள்.நாற்பது ஸம்ஸ்காரங்களில் தினந்தோறும் பண்ண வேண்டியவை சில இருக்கின்றன. சில சில காலங்களில் பண்ணவேண்டியவை சில. ஆயுளில் ஒரு தரம் பண்ண வேண்டியவை சில. இவைகளுக்குள் ஒவ்வொரு கிருஹஸ்தனும் நன்றாகத் தெரிந்துகொண்டு தினமும் செய்யவேண்டிய முக்கியமான ஸம்ஸ்காரங்கள் பஞ்ச மஹா யக்ஞங்கள் என்ற ஐந்து. மந்திரமில்லாமல் வெறுமே செய்யும் காரியத்தைவிட, மந்திரத்தைச் சொல்லிச் செய்வதே அதிக நன்மை தர வல்லது. இப்படி மந்திரபூர்வமாகக் காரியம் பண்ணுவதே ஸம்ஸ்காரமாகிறது. கிருஹஸ்தன் தினந்தோறும் செய்யவேண்டிய பஞ்சமஹா யக்ஞத்தில் ஸோஷல் சர்வீஸ் (சமூக ஸேவை) என்பது மந்திர பூர்வ ஸம்ஸ்காரமாகிறது.