book

இந்து சமய தத்துவங்களின் ஞானக்களஞ்சியம்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சென்ன கேசவ பெருமாள்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :480
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386433763
Add to Cart

ஆன்றோர்களின் ப்ரவசனங்கள், சமய ஞானிகளின் கட்டுரைகள், ஆன்மீக சஞ்சிகைகள், தத்துவ நூல்கள், செவிவழிச் செய்திகள், சான்றோர்கள் கூறிய நியமங்கள், ஆச்சார்யர்களின் வழிகாட்டுதல்களிலிருந்து இந்நூல் தொகுக்கபெற்றுள்ளது.

கையில் த்வைதம் வயிற்றில் அத்வைதம்

 தென்னக ரயில்வேயில் வர்த்தகப் பிரிவில் தலைமை எழுத்தராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் சென்ன கேசவ பெருமாள். இந்து சமயம் குறித்து அவர் படித்த புத்தகங்களிலிருந்தும், கடந்த சில ஆண்டுகளில் வெளியான கட்டுரைகளிலிருந்தும் அவர் சேகரித்த குறிப்புகளின் பெருந்தொகுப்பு இது. அவர் சொந்தமாக வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு, இந்த சமயத்தில் உள்ள அடிப்படையான கருத்துகளை, எளிமையாக எடுத்துரைக்கிறது. ஷண்மதம் எனப்படும் ஆறு வகை வழிபாடு நெறிகளின் தத்துவ விளக்கங்களைச் சுவைபடச் சொல்கிறது. உதாரணத்துக்கு, ரமணர் தன்னைக் காண வந்த பக்தரிடம் சொன்ன ஒரு விளக்கம்: நீயும் உன் கையில் இருக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டால் விசிஷ்டாத்வைதம்: அது ஜீரணமாகிவிட்டால் அத்வைதம் இரண்டும் ஒன்றான நிலை.


இறையன்பர்கள், சான்றோற்ள் ஆன்மிக் சொற்பொழிவாளர்கள், ஆகியோர் அருளிய சம்ய தத்துவைங்கள் விளக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நாளிதழ்கள், வார இதழகள், தீங்களிதழ்கள், ஆண்டு மலர்கள் ஆகியவற்றில் இடம் பெற்ற இந்து சமயம் தொடர்பான செய்திகள் முதலியவற்றை நிரல்பட தொகுத்து, ஆங்காங்கே குறிப்புகளையும், விளககங்களையும் தந்து நூலாக்கிய ஆசிரியரின் அளப்பரிய முயற்சி பாராட்டக்குரியது,

  ‘இறைவனைகாண இயலாது: உணர முடியும்’ என விளக்கியுள்ல பாங்கும், ராம்கிருஷ்ண பரமஹம்சர் இறைவனை கண் குளிரக் கண்ட நிகழ்வை ஆசிரியர் காட்சிப்படுத்தியள்ள முறையும் சிறப்புகுரியது. நாம் மதம் என்பதை ஆன்மிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்; உண்மையில் மதம் வேறு, ஆன்மிகம் வேறு. மதைங்களையெல்லாம் கடந்து வெறும் புள்ளியை அடையும் நிலையில் ஆன்மிகம் தோண்றும்.  தன்னை உடலாகவோ மனமாகவோ கருதம்ல், தன்னை ஓர் ஆத்மா என்கிற அளவுககுப் புரிந்துகொண்டால், அதிதான் ஆன்மிகம் எனக் கூறும் சுகிசிவத்தின் கருத்து, ஆன்மிகத்தைப் பற்றிய புரித்லை உண்டாக்குகிறது, த்வைத்ம் வசிஷடாத்தையும், அத்வைதம் என்னும் மூன்று தத்துவங்களையும்  பாமரனுக்கும் புரியும்படி கூறிய ரமண மகரிஷியின் விள்க்கம் அற்புதமானது. தெய்வாம்சைங்களான், சண்டி கேசுவரர் முதல் ருத்ராக்‌ஷம் சைங்கு, காளிகிராமம் ஈராக அத்தனையும் ஒட்டுமொத்தமாக விள்ககி, வழிபடுவதால் எற்படும் நன்மைகளையும்  பட்டியலிட்டுள்ளார். பாடல் பெற்ற திருத்தலைங்கல், பாடியோர் வரலாறு என, இந்து சமயத்தின் சிறப்புகளைக் காட்டுகிறது இந்நூல்