book

தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி

₹403.75₹425 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா. கணபதி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1332
பதிப்பு :25
Published on :2018
Add to Cart

சமாதி ஷட்க ஸம்பத்தில்] அடுத்தது ச்ரத்தை. ஸம்ஸ்க்ருதத்தில் “ச்ரத்தா”, “திதிக்ஷை” மாதிரியே ‘ஆ’காரத்தில் முடியும் ‘ச்ரத்தா’வும் பெண்பால்தான். நம்பிக்கையிலே – நேர் ப்ருஃபில் இல்லை; ஒரு நம்பிக்கையின் மீது – ‘சாஸ்திரம் சொன்னால் ஸரியாய்த்தானிருக்கும், சிஷ்டர்கள் சொன்னால் ஸரியாய்த்தானிருக்கும்’ என்ற நம்பிக்கையின்மேல் ஒரு விஷயத்தில் மனப்பூர்வமாக ஈடுபட்டிருப்பதே ச்ரத்தை. புருஷர்கள் மாதிரி ஸ்திரீகளும் ரொம்பப் படிப்பு, ஆராய்ச்சி என்று போகாத வரையில் அவர்களே ச்ரத்தையில் உசந்து நின்றிருக்கிறார்கள். ஓரளவுக்கு அப்படிப் போனபின் இப்போதுங்கூட ச்ரத்தையில் ஸ்திரீகள் புருஷர்களைவிட ஒரு படி மேலே இருப்பதாகவே நினைக்கிறேன். போகப் போக எப்படியிருக்குமோ?ச்ரத்தையினால்தான் ஆஸ்திக்யமே என்று முன்னாலேயே சொன்னேன். ஆண்களில் எவ்வளவு பேர் நாஸ்திகராகப் போயிருக்கிறார்களோ அதில் கால் பங்குகூட பெண்கள் இருக்க மாட்டார்கள். நாஸ்திகக் கட்சித் தலைவர்களின் பெண்டாட்டிகள்கூட கோவில், குளம், வ்ரதம், பூஜை முதலானதை விட்டுவிடவில்லை என்று பார்க்கிறோம். அதனால் ச்ரத்தையைப் பெண்பாலாக வைத்தது நியாயமாகவே தெரிகிறது.ஆரம்பத்திலேயே ச்ரத்தை பற்றிச் சொன்னேன். சொல்லும்போதே, ‘இந்த ‘டாபிக்’ மறுபடி ஸாதனாந்தத்திலும் [ஸாதனை முடிவிலும்] வரும்; அப்போது இன்னம் சிலது சொல்கிறேன்” என்றும் சொன்னேன். அந்த இரண்டாவது கட்ட – ‘ஹையர் க்ரேட்’- ச்ரத்தைக்குத்தான் இப்போது வந்திருக்கிறோம்.