கலிங்கத்துப்பரணியாராய்ச்சி
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. இராகவையங்கார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :65
பதிப்பு :1
Published on :2013
Add to Cartபரணி என்பது நாள் விண்மீன்களுள் ஒன்று. அது கொற்றவைக்குரியது என்று குறிக்கப்பெறுவது. கொற்றவை போர்க்கடவுள். ஆதலின் போரில் பெற்ற வெற்றியை அவளுக்கே படையலிட்டுக் கொண்டாடு வது பெருவழக்கு. “காடுகெழு செல்விக்குப் பரணி நாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவ தொரு வழக்கு” என்பார் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய பேராசிரியர். அதனால் அந்தக் கொண்டாட்டத்தைப் பாடும் இலக்கியமும் பரணியென்றே பெயர் பூண்டது.
வேறெந்த இலக்கியத்திலும் காணவியலாத தனிச்சிறப்பொன்று பரணியின் தலைப்புக்குண்டு. வென்றவன் பெயரில் விளங்காமல் தோற்றவன் பெயரில் துலங்குவதுதான் பரணியின் தனிச்சிறப்பு. அதனால்தான் வென்றெடுக்கப்பட்ட நாட்டையே கலிங்கத்துப்பரணி தன் தலையில் தூக்கி வைத்துத் தலைப்பாக்கியிருக்கிறது. இது தோற்றவரையும் பெருமைப்படுத்தும் தமிழின் தூய பண்பாடாகும்.