சுந்தரக் கனவுகள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2013
Add to Cartசுந்தரக் கனவுகள் எனும் இந்த நாவல் திரு. நா.பார்த்தசாரதி அவர்களால் எழுதப் பெற்று, இதயம் பேசுகிறது எனும் வார இதழில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1984 ஜுன் பாதம் வரை 33 வாரங்கள் தொடர்கதையாக வெளிவந்தது. நவம்பர் 1984 இல் புத்தகமாக வெளியிடப்பட்டது.
அதன் பிறகு பதிப்பில் வராத இந்த நாவல் 33 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தற்பொழுது சீதை பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. உழைக்கும் பத்திரிக்கையாளர்களின் போராட்டங்களை விளக்குகின்ற வகையில் எழுதப்பட்ட நாவல்களுள் இது மிகச் சிறந்த படைப்பாகும். பத்திரிக்கைத்துறையைச் சாராத ஓர் எழுத்தாளர் பத்திரிக்கைத் துறை சார்ந்த ஒரு கதை எழுத வேண்டுமெனில் தான் கேட்டறிந்த கற்றறிந்த செய்திகளைக் கொண்டு கற்பனையில் கதையாக எழுதுவார். ஆனால் நா.பார்த்தசாரதி ஒரு பத்திரிக்கையாளர். தீபம் எனும் இலக்கிய இதழை 23 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர். கல்கி, தினமணிக் கதிர் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும், ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். எனவேதான் அவரால், தான் அனுபவித்த பிரச்சனைகளையும் சந்தித்தப் போராட்டங்களையும் உணர்வு பூர்வமாகக் கதையாக எழுத முடிந்தது. பட்டப் படிப்பு முடித்த இளைஞன் ஒருவன் பத்திரிக்கைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு பத்திரிக்கை ஒன்றில் வேலையில் சேர்ந்து அங்கு அவன் பெறுகின்ற அனுபவங்களை எதார்த்தமாக எழுதியுள்ளார். பத்திரிக்கைத் துறையைப் பற்றிக் கல்லூரி நாட்களில் அவனுக்கிருந்த கனவுகள் எதார்த்த உலகில் எவ்வாறு கலைந்து கரைந்து போகின்றன என்பதை விளக்குகின்ற இடங்களில் ஆசிரியரது அனுபவங்கள் அவருக்குத் துணைபுரிந்துள்ளமை நன்றாகவே அறிய முடிகின்றன.