பெண்களை சக்தியின் சொரூபமாகக் கொண்டாடும் நம் நாடு அவர்களின் புத்திக் கூர்மை, அறிவாற்றல், தியாக உள்ளம், கடுமையான உழைப்பு, நெஞ்சுறுதி, அன்பு, பொறுமை போன்ற மேன்மையான குணங்களுக்குத் தலை வணங்கும். அப்படுப் பட்ட பெண்களும், தெய்வத்தைப் போல அவர்களைக் கொண்டாடும் இடங்களில்தான் மிளிர முடியும். அல்லாது அவர்கள் சார்ந்து இருக்கும் ஆண்களால் அது தந்தையோ, கணவனோ அல்லது மற்றவர்களால் ஒடுக்கப்படும் போதும், ஏமாற்றப்படும் போதும், கொழு கொம்பில்லாத கொடியைப் போல் அலைக் கழிக்கப்படுகிறார்கள்.