அப்போது ரவீந்திரருக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். அவர் தம் தந்தையோடு வங்காளத்தில் உள்ள பத்மா என்ற ஆற்றில் படகிலே அடிக்கடி செல்வது வழக்கம். தந்தை படகில் அமர்ந்து கடவுள் வழிபாட்டில் ஆழ்ந்திருப்பார். ரவீந்திரர்,படகோட்டி துடுப்பை ஓட்டுவதையும், மற்ற இயற்கைக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்.