தந்தைப் பெரியார் அவர்களால் தண்டவாளம் என்றும் கலைஞர் அவர்களால் ஆரூர் வேங்கை என்றும் அழைக்கப்பட்ட அரங்கராசு அவர்களின் மகன் திருவிடம். பெரியார் அவர்களால் பெயர் சூட்டப்பட்டவர். நான் வளர்ந்து ஆளாக்கியப்பிள்ளை என்று கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
தந்தையாரின் மறைவிற்க்குப்பின் தன்னை ஆளாக்கிய அய்யனைப் பற்றிய நினைவுகளை நன்றிகளுடன் சுவைப்படக் காட்சிப்படுத்துகிறார்.
ஒருமுறை பெரியார் திடலில், புலவர் இமயவரம்பனிடம் என்னை அறிமுகப்படுத்திய அய்யா- தண்டவாளம் மகன் என்றார்.
தெரியும் அய்யா. மாகாண தொண்டர் படைத் தலைவராக இருந்தார்- என்றார் இமயவரம்பன்.